வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 2 அக்டோபர் 2015 (17:43 IST)

புலி திரைப்படத்திற்கு வரிவிலக்கு கிடையாது : தமிழக அரசு அறிவிப்பு

நடிகர் விஜய் நடித்துள்ள புலி திரைப்படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு  அளிக்க முடியாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


 


 
இப்படத்தினை பார்த்த தேர்வுக் குழுவினர் ஆறு பேரும், இந்தப்படம் கேளிக்கை வரி விலக்குக்கு தகுதியான படம் இல்லை என்று அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். அதற்கான காரணங்களை அவர்கள் ஆறு பேரும் தனித்தனியாக குறிப்பிட்டுள்ளனர். அவை பின் வருமாறு:
  • மூட நம்பிக்கைகளை, உண்மை போல காட்டும் காட்சி, தமிழ் பண்பாட்டுக்கு உகந்ததாக இல்லை. மேலும், அதிகமான வன்முறை காட்சிகள் உள்ளன'. 
     
  • பாடல் காட்சியின் சில இடங்களில் ஆபாசமாக இருக்கின்றன. குழந்தையின் கழுத்து அறுபடுவது, சண்டைக் காட்சியில் வன்முறை மற்றும் கொலை நேரடியாக இருப்பது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
     
  • காட்சிகளில் மனித உயிருக்கு மதிப்பு அளிக்கவில்லை. குழந்தைகளையும், பெண்களையும், வெட்டிக் கொல்வது போன்ற காட்சிகள் ஏற்புடையதாக இல்லை. அதிகமான வன்முறைக் காட்சிகள் இருக்கின்றன.
     
  • படம் முழுக்க, வன்முறை ஆக்கிரமித்துள்ளது. இரட்டை அர்த்த வசனங்கள், 12 வயது பெண் குழந்தை, கழுத்து வெட்டப்படுவதாக காட்டப்படுகிறது. படம் முழுக்க, மூடநம்பிக்கைக்கு, உயிரூட்ட முனைந்திருக்கின்றனர்.
     
  • படத்தின் தலைப்பு, தமிழ் பெயர் கொண்டது. 'யு' சான்றிதழ் பெற்ற படம்; ஆபாசமில்லை; வன்முறை அதிகம் உள்ளது.
     
  • ஆபாசம் இல்லை; ஆனால் வன்முறை அதிகமாக இருக்கிறது. 
     
மேற்கண்ட காரணங்களால், இப்படம் வரி விலக்குக்கு தகுதி இல்லை என பரிந்துரை செய்துள்ளனர். அதை ஏற்று தமிழக அரசு, 'புலி' திரைப்படத்துக்கு, கேளிக்கை வரிவிலக்கு அளிக்க இயலாது என அறிவித்துள்ளது.