”உள்ளாட்சி தேர்தல் நடத்த தடையில்லை”.. உச்சநீதிமன்றம்

Arun Prasath| Last Modified புதன், 11 டிசம்பர் 2019 (13:37 IST)
திமுக உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு முறையாக பயன்படுத்தப்படவில்லை என தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தல் நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு முறையாக பயன்படுத்தப்படவில்லை என திமுக கூட்டணி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், உள்ளாட்சி தேர்தலில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 2011 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

முன்னதாக 9 புதிய மாவட்டங்களுக்கு 4 மாதங்களில் தேர்தல் நடத்தவேண்டும் என உத்தரவிட்ட நிலையில், தற்போது அதனை 3 மாதங்களுக்குள் தேர்தலை நடத்தவேண்டும் என உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :