ரஜினியின் கிளீன் போல்ட்: அரங்கத்தையே அதிர வைத்த அந்த வார்த்தை!

Last Modified சனி, 6 ஜனவரி 2018 (13:20 IST)
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பிற்கு பின்னர் ஊடகங்களில் ரஜினி குறித்தான செய்திகள் அதிகம் இடம்பெறுகின்றன. இந்நிலையில் அவர் கூறிய ஒரு வார்த்தை அரங்கத்தை அதிர வைத்தது.
 
நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரை நட்சத்திரங்கள் இணைந்து நடத்தும் நட்சத்திர விழாவில் கலந்துகொள்ள மலேசியா சென்றுள்ளார். மலேசிய சென்றுள்ள அவர் நடிகர்கள் விளையாட உள்ள நட்சத்திர கிரிக்கெட்டையும் கண்டுகளிக்க உள்ளார்.
 
இந்நிலையில் மேடை ஏறிய நடிகர் ரஜினியிடம் கிரிக்கெட் தொடர்பான பல கேள்விகளை கேட்டனர். அதற்கு ரஜினி பல சுவாரஸ்யமான தகவல்களை பதிலாக அளித்தார். அப்போது நடிகை சுஹாசினி ரஜினியிடம், உங்கள் இளமைக்காலத்தில் இருந்து இப்போதுவரை யாராவது உங்களை கிளீன் போல்ட் ஆக்கியிருக்கிறார்களா? என கேட்டார். அப்போது, ரஜினி தனகே உரிய ஸ்டைலில், என்னை இதுவரை யாரும் கிளீன் போல்ட் ஆக்கியதில்லை என கூறியபோது அரங்கமே ஆர்பரிப்பால் அதிர்ந்தது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :