Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

"அவங்களுக்கு கொடுப்பீங்க; எங்களுக்கு கொடுக்கமாட்டீங்களா?” - கொந்தளிக்கும் சீமான்

Last Modified: புதன், 11 ஜனவரி 2017 (15:14 IST)

Widgets Magazine

ஓணம் பண்டிகை, குருநானக் ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி போன்ற பண்டிகைகளுக்கு விடுமுறை விடுகிற மத்திய அரசு பொங்கல் திருநாளுக்கு கட்டாய விடுமுறை அளிக்கத் தேவையில்லை என அறிவித்து இருப்பது தமிழர் விரோதப் போக்கினையே காட்டுகிறது என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறியுள்ளார்.


 

இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழ்த்தேசிய இனத்தின் பெருமைமிகு பண்டிகையான பொங்கல் திருநாளுக்குக் கட்டாயமாகப் பொது விடுமுறை அளிக்கத் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்து இருப்பது இந்நாட்டில் வசிக்கும் 10 கோடிக்கும் மேற்பட்ட தமிழர்களை வெகுவாகக் காயப்படுத்தி இருக்கிறது.

கர்நாடாகாவில் 1 கோடிக்கும் அதிகமான தமிழர்கள், மகாராசுடிரத்தில் ஏறக்குறைய 35 லட்சத்திற்கும் மேலான தமிழர்கள் என இந்நாடு முழுக்கத் தமிழர்கள் பரவி வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்டு இருக்கிற இந்த அறிவிப்பு தமிழ்த்தேசிய இனத்தையே அவமதிக்கிற கொடுஞ்செயல்.

ஏற்கனவே காவிரி நதி நீர் சிக்கலில் உச்சநீதிமன்றம் உத்திரவிட்ட பிறகும் கூடக் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுத்தது, தமிழரின் தொன்மையான பண்பாட்டு நிகழ்வான சல்லிக்கட்டு மீதான தடையை நீக்க மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்ற வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருவது, பாடத்திட்டங்களில் சமஸ்கிருத மொழி திணிப்பு, கல்விக்கொள்கைகளில் மாற்றங்கள் என்பதான தொடர்ச்சியான தமிழர் விரோதச் செயல்களில் மோடி தலைமையிலான பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. தற்போது வெந்தப்புண்ணில் வெந்நீர் ஊற்றும் தமிழ்த்தேசிய இனத்தின் பெருமை மிகு திருவிழாவான பொங்கல் பண்டிகைக்குக் கட்டாய விடுமுறை இல்லை என்று அறிவித்து இருப்பது தமிழர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பொங்கல் திருநாளுக்குக் கட்டாய விடுமுறை தேவையில்லை என்கிற மத்திய அரசின் அறிவிப்பு தமிழ்த்தேசிய இனத்தையே அவமதிக்கும் அறிவிப்பாகதான் இதைக் கருத வேண்டியுள்ளது. தமிழர் நிலத்தில் மட்டும் பிற இனத்து பண்டிகைகளான ஓணம் பண்டிகை, குருநானக் ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி போன்ற பண்டிகைகளுக்கு விடுமுறை விடுகிற மத்திய அரசு தமிழர்களின் தேசிய திருவிழாவான பொங்கல் திருநாளுக்கு மட்டும் கட்டாய விடுமுறை அளிக்கத் தேவையில்லை என அறிவித்து இருப்பது அப்பட்டமான தமிழர் விரோதப் போக்கினையே காட்டுகிறது.

இந்தியா என்கிற நாட்டின் உருவாக்கத்திற்கும், அதன் சுதந்திர போராட்டத்திற்கும் தமிழர்கள் எண்ணற்ற ஈகங்கள் செய்திருக்கின்றனர். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் தொடங்கி, சமீபத்திய கார்கில் போர் வரையிலும் இந்நாட்டிற்காகத் தன்னுயிர் தந்த தமிழர்களின் தியாகம் அளப்பரியது. இந்நாட்டிற்கு வரி செலுத்தி, வாக்கு செலுத்தி மற்ற எல்லா மாநிலங்களையும் காட்டிலும் பற்றுறுதி மிக்கக் குடிமக்களாகத் திகழும் தமிழர்களைத் தொடர்ச்சியாக அவமானப்படுத்தி, காயப்படுத்தி வருவதன் மூலமாக மத்திய அரசு தமிழர்களை மாற்றாந்தாய் மக்களாகத்தான் பார்க்கிறது என்பதை உறுதி செய்யும் அறிவிப்பாகதான் மத்திய அரசின் இந்த அறிவிப்பு அமைந்திருக்கிறது.

சங்க காலம் தொடங்கித் தமிழரின் வாழ்வியலில் இரண்டற கலந்துள்ள பெருமிதப்பண்டிகை பொங்கல் திருவிழாவாகும். தமிழரின் பண்பாட்டு விழுமியத் திருவிழாவான பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அளிக்க மறுப்பதன் அரசியல் எம்மை இந்நாட்டின் மக்கள் இல்லை என மத்திய அரசே அறிவித்ததற்குச் சமம்.

அதுவும் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் இந் நாட்களில் இது போன்ற அறிவிப்பு வெளியிடுவதற்கான உள்நோக்கம் தமிழர்களைச் சீண்டி பார்ப்பது அன்றி வேறென்ன…?

ஏற்கனவே இவ்வருடமாவது சல்லிக்கட்டு நடக்குமா என்கிற எதிர்பார்ப்பிலும், ஆற்றாமையிலும் இளைஞர்களும், மாணவர்களும் தன்னெழுச்சியாகப் போராடி வரும் இக்காலச் சூழலில் இது போன்ற அறிவிப்பினைத் திட்டமிட்டு வெளியிடும் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு போராடி வரும் தமிழர்களைச் சல்லிகட்டுப் பிரச்சனையிலிருந்து திசைத்திருப்ப இது போன்ற அறிவிப்பினை வெளியிடுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

எனவே மத்திய அரசு உடனே இதில் கவனம் செலுத்தி, வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பினைத் திரும்பப்பெற்று.. கொதித்துப் போய் இருக்கும் தமிழர் நிலத்தைப் போராட்டக்களமாக மாற்றிட வேண்டாம் எனக் கோருகிறேன். மேலும் தமிழர்களின் தேசிய விழாவான பொங்கல் பண்டிகையை தேசியப் பண்டிகையாக அறிவித்துக் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என்றும், மறுக்கும் பட்சத்தில் தமிழர்களை ஒரே குடையின் கீழ் திரட்டி நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாக மாபெரும் போராட்டங்களில் ஈடுபடும் என எச்சரிக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.​


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு!

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு ...

news

சசிகலாவை கிண்டலடித்த இயக்குனர் மனோபாலா மீது புகார்...

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குறித்து, இயக்குனர் ...

news

ஜல்லிக்கட்டுக்காக தடையை மீறுவது தவறில்லை

ஜல்லிக்கட்டு அவவரச் சட்டம் கொண்டுவராத பட்சத்தில் தடையை மீறுவதில் தவறில்லை என்று அன்புமணி ...

news

தீபா பேரவைக்கு ஆள் சேர்க்கும் நபரை மிரட்டும் சசிகலா உறவினர்கள்...

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் சொந்த மாவட்டமான தஞ்சாவூரில், ஜெ.வின் அண்ணன் மகள் தீபா ...

Widgets Magazine Widgets Magazine