வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 25 ஆகஸ்ட் 2015 (01:20 IST)

டெங்கு காய்ச்சல் இல்லை - மக்கள் பீதி அடையத் தேவையில்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் டெங்குக் காய்ச்சல் மிகவும் குறைவாகவே உள்ளது. இருப்பினும், அதையும் கட்டுப்படுத்தி உள்ளோம் என்று மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர்  விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

 
திருச்சியில், மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் சிறப்பு மையத்தை மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
தமிழகத்தில் பரவியுள்ளது சாதாரண வைரஸ் காய்ச்சல்தான். டெங்கு காய்ச்சல் என மக்கள் பீதி அடையத் தேவையில்லை.
 
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள  பகுதிகளில் 24 மணி நேர சிறப்பு முகாம் நடத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது.
 
தமிழகம் முழுக்க, இந்த மாத இறுதிக்குள் சுமார் 7,300 சுகாதார செவிலியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இப்பணிக்கு விண்ணப்பித்த 40 ஆயிரம் பேரில் 38 ஆயிரம் பேர் தேர்வெழுதினர், முடிவில் 7,300 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றார்.