1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (09:04 IST)

பாஜகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை : மு.க.ஸ்டாலின் அதிரடி

பாஜக வுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்று திமுக பொருளாலர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்தார்.


 

 
வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்வதற்காக தமிழக கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். யார் யாரோடு கூட்டணி வைப்பார்கள் என்று ஒவ்வொரு நாளும் புதிய செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால் எந்த கட்சியும் இன்னும் தங்கள் கூட்டணியை முடிவு செய்யவில்லை.
 
இந்நிலையில், பாஜக, திமுக, தேமுதிக இணைந்து ஒரு கூட்டணி உருவாகும் என்பது போல் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது. பாஜக-வை சேர்ந்த சுப்ரமனியசுவாமியும் இந்த கருத்தை தெரிவித்திருந்தார்.
 
ஆனால் அந்த கட்சிகளின் முக்கிய தலைவர்கள் யாரும் அதுபற்றி இதுவரை வாய் திறக்கவில்லை. இந்நிலையில் மு.க.ஸ்டாலின் அது பற்றி பேசியிருக்கிறார்.
 
வாழும் கலை நிறுவனர் ரவிசங்கள் நேற்று முன் தினம் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அதன்பின் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாஜகவுடனான கூட்டணி பற்றி அவரிடம் கேட்ட போது “எங்களை தீண்ட தகாதவர்கள் என்று கூறியவர்கள் இப்போது எங்கள் பின்னால் வருகிறார்கள். அது எங்களுக்கு மகிழ்ச்சி. ஆனால் பாஜகவுடன் தேர்தல் கூட்டணி குறித்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. அதற்கும் வாய்ப்பும் இல்லை. அது தொடர்பாக வெளிவந்த செய்திகள் எல்லாம் ஆதாரமற்றவை” என்று கூறினார்.
 
பாஜக-வுடன் திமுக கூட்டணி வைக்கும் என்று அனைவரும் பேசிக் கொண்டிருந்த நிலையில் மு.க.ஸ்டாலினின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.