வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 13 ஜூலை 2018 (22:08 IST)

பாஜகவுடன் கூட்டணி இல்லை: ராமதாஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு

கடந்த 2014ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது பாஜக கூட்டணியில் இருந்த மதிமுக, தேர்தல் முடிந்தவுடனே தனது கூட்டணியை முறித்து கொண்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த கூட்டணியில் இருந்த மற்றொரு கட்சியான பாமகவும் தற்போது கூட்டணியில் இருந்து விலகியுள்ளது. 
 
பாஜக கூட்டணியில் போட்டியிட்டு தான் அன்புமணி எம்பி ஆன நிலையில் தற்போது இந்த கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் இப்போதைக்கு பாஜக கூட்டணியில் அதிமுக தவிர வேறு எந்த கட்சியும் இணைய வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.
 
அதே நேரத்தில் காங்கிரஸ் கூட்டணி கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து வருகிறது. இந்த கூட்டணியில் ஏற்கனவே திமுக இருக்கும் நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் திருமாவளவனின் விடுதலைச்சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது. ஆனால் விசிக  இருக்கும் கூட்டணியில் பாமக இருக்காது என்பதால் பாமக வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கூட்டணியுடன் இணைந்து போட்டியிடும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.