காங்கிரஸ்- பாஜகவுடன் கூட்டணி இல்லை: சொல்கிறார் ஜி.கே.வாசன்

K.N.Vadivel| Last Modified புதன், 13 ஜனவரி 2016 (23:47 IST)
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில், காங்கிரஸ்-பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என ஜி.கே.வாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
 
விழுப்புரம் மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி செயல் வீரர்கள் கூட்டம் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
 
இந்தக் கூட்டத்தில், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது:–
 
தமிழகத்தில், விவசாயிகள், மாணவர்கள், நெசவாளர்கள், மீனவர்கள் போன்ற அனைவரின் பிரச்சினைகளுக்காக தமாகா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இதனால் தமாகாவுக்கு மீது மக்கள் நல்ல அபிப்ராயம் ஏற்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் தமாகா வளர்ந்து வருகிறது.
 
வரும் சட்டப் பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜகவுடன், எந்த காலத்திலும், தமாகா கூட்டணி வைக்காது. தமாகாவின் பாதை தனித்தன்மை கொண்டது என்றார். 


இதில் மேலும் படிக்கவும் :