வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (00:38 IST)

என்.எல்.சி. தொழிலாளர் பிரச்சினைக்கு மத்திய அரசின் அலட்சியமே காரணம்: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

என்.எல்.சி.  தொழிலாளர் பிரச்சினைக்கு மத்திய அரசின்  மெத்தனப் போக்கே காரணம் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டினார்.


 

இது குறித்து, பண்ருட்டியில், தமாகா தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
நிலம் கையகப்படுத்தும் சட்டம் மூலம் விவசாயிகளுக்கு பாதிப்புதான் அதிகம். அந்த சட்டத்தை விவசாயிகள் விரும்பவில்லை. இந்த சட்டத்தினால் ட்டு மொத்த விவசாயிகளின் முன்னேற்றம் பாதிப்பு அடையும். பொருளாதார விவசாயிகளை பாதிக்கும் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
 
கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை கரும்பு ஆலை நிர்வாகம் உடனே வழங்க முன்வரவேண்டும். கரும்பு ஆலை நிர்வாகத்தை அழைத்து தமிழக அரசு பேச வேண்டும். கரும்புக்கு நல்ல விலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
என்.எல்.சி. பிரச்சினை, தமிழக மீனவர்கள் பிரச்சினை போன்று நீண்டு கொண்டே செல்கிறது. இதற்கு மத்திய அரசின் மெத்தன போக்குதான் காரணம்.
 
என்.எல்.சி. தொழிலாளர் பிரச்சினையில், பல முறை பேச்சு வார்த்தை நடத்தியும் தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில், மத்திய, மாநில அரசு விரைந்து செயல்பட்டு தொழிலாளர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்  என்றார்.