வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 25 ஜூன் 2016 (08:50 IST)

கருணாநிதியின் வேட்டியை உருவிவிடவா போகிறோம்?: நிர்மலா பெரியசாமியின் அநாகரிக பேச்சு

திமுக தலைவர் கருணாநிதி இந்தியவிலேயே ஒரு முக்கியமான, மூத்த, வயதான அரசியல் தலைவர். 5 முறை தமிழக முதல்வராக இருந்தவர். அவரை பற்றி தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் அதிமுக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி நாகரிகம் இன்றி பேசியுள்ளார்.


 
 
திமுக தலைவர் கருணாநிதி சட்டசபைக்கு வர அவரது சக்கர நாற்காலி வந்து செல்லும் அளவுக்கு வசதியான இருக்கை செய்து கொடுக்க வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
 
திமுகவின் கோரிக்கையை ஏற்று அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது, அதில் அவரது சக்கர நாற்காலி வந்து செல்ல முடியும் என அதிமுக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் அதிமுக ஒதுக்கிய இருக்கையில் கருணாநிதியின் சக்கர நாற்காலி வந்து செல்ல முடியாது என திமுக தரப்பு குற்றம் சாட்டியது.
 
இதனையடுத்து நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் திமுக தலைவர் கருணாநிதி கலந்துகொள்ளவில்லை. இதனையடுத்து தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் பங்கேற்ற அதிமுக தலைமைக் கழக பேச்சாளரும், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருமான நிர்மலா பெரியசாமி சர்ச்சைக்குறிய வகையில் பேசியுள்ளார்.
 
விவாதத்தில் பேசிய அவர், திமுக தலைவர் கருணாநிதி சட்டசபைக்கு வந்தால், அவரது வேட்டியை உருவிவிடவா போகிறோம் என்று அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் பேசினார். இவரது பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
ஒரு மூத்த, வயதான, 5 முறை தமிழக முதல்வராக இருந்த ஒருவரை இது போன்று பேசுவது நாகரிகமில்லை எனவும், கண்டிக்கத்தக்கது எனவும் கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.