Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பேராசிரியை நிர்மலாதேவி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

CBI
Last Updated: செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (15:54 IST)
பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கு அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் இருந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

 
மதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
 
அதில், அவரிடம் இருந்த 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த செல்போன்களில் பல பெண்களின் புகைப்படங்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், பல உயர் அதிகாரிகளின் செல்போன் எண்கள் அதில் இருந்ததாக கூறப்படுகிறது. 
 
துணைவேந்தர் செல்லதுரை ஒரு குழுவை அமைத்துள்ளார். ஆளுநர் வட்டம் வரை தனக்கு செல்வாக்கு உண்டு என நிர்மலா தேவி கூறிகிறார். இந்நிலையில்தான், இதுபற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் ஒரு குழுவை ஆளுநர் பன்வாரிலால் அமைத்தார்.
 
இந்நிலையில் தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் ஏற்கனவே இதில் விசாரணை வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :