Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

லட்சுமி ராமகிருஷ்ணனால் எத்தனை பேர் தற்கொலை செய்துக்கொண்டார்கள் தெரியுமா? நிர்மலா பெரியசாமி

Last Modified: வியாழன், 29 டிசம்பர் 2016 (20:04 IST)

Widgets Magazine

லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்வதெல்லாம் நிகழ்ச்சி நடத்த வந்த பிறகு, அதில் கலந்துக்கொண்ட குடும்பங்களுடன் சம்பந்தப்பட்ட எத்தனை பேர் தற்கொலை செய்துக்கொண்டு இருக்கிறார்கள் தெரியுமா? என்று சொல்வதெல்லாம் நிகழ்ச்சியின் முன்னாள் தொகுப்பாளர் நிர்மலா பெரியசாமி கூறியுள்ளார்.


 

 
சொல்வதெல்லாம் நிகழ்ச்சி, லட்சுமி ராமகிருஷ்ணன் அந்நிகழ்ச்சியில் உயோகிக்கும் என்னம்மா இப்படி பண்ணுறீங்களேமா? என்ற வார்த்தை மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமடைந்தது. அதைத்தொடர்ந்து அனைவரும் சமூக வலைத்தளம் மற்றும் திரைப்படங்களில் அந்த வர்த்தைக்கொண்டு கேலி செய்ய தொடங்கினர். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெர்விக்கப்பட்டு வந்தது.
 
அண்மையில் திரைப்படம் ஒன்றில் அந்நிகழ்ச்சியை கேலி செய்ததற்கு, டுவிட்டரில் லட்சுமி ராமகிருஷணன் ஆவேசமடைந்து பல கருத்துகளை பதிவிட்டு வந்தார். பின்னர் ஒருகட்டத்தில் கோபமடைந்து டுவிட்டர் தளத்தில் இருந்து வெளியேறுகிறேன் என்று அறிவித்து விட்டு வெளியேறினார்.
 
அதன்பின்னர் அந்த நிகழ்ச்சிக்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குஷ்பு தலைமையில் இதுபேன்ற குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சி ஒன்று ஒளிப்பரப்பானது. இதனால் ராதிகா, ஸ்ரீபிரியா, ரஞ்சினி போன்ற நடிகைகள் கடுமையாக இந்த நிகழ்ச்சிகளுக்கு எதிர்ப்பு  தெரிவித்தனர்.
 
இந்நிலையில் இதுகுறித்து சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் ஆரம்ப தொகுப்பாளர் நிர்மலா பெரியசாமி கூறியதாவது:-
 
ஜீ தமிழ் சேனலில் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி உருவாக்கத்தின்போது, தொகுப்பாளராக என் பெயரைப் பரிந்துரைத்திருக்கிறார். அப்படித்தான் அந்த வாய்ப்பு வந்தது. முதல் நிகழ்ச்சியே, டி.ஆர்.பி ரேட்டிங்கில் நல்ல இடம் பெற்றது. தொடர்ந்து மக்களிடம் பெரிய அளவில் ரீச் ஆனது. எதையும் சிறப்பாக செய்வது என்னுடைய வழக்கம்.
 
இந்த நிகழ்ச்சி மக்களிடையே இன்றும் ஆர்வம் குறையாமல் சென்றுகொண்டிருப்பதில், நான் அமைத்துக்கொடுத்த அடிப்படைக்கு மிகப்பெரிய பங்கு உண்டு என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்வேன். 
 
லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை நடத்த வந்த பிறகு, அதில் கலந்துகொண்ட குடும்பங்களுடன் சம்பந்தப்பட்ட எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார்கள் தெரியுமா? சமீபத்தில் கூட அடுத்தடுத்து மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். நிகழ்ச்சியின் பெயர் என்னவோ, 'சொல்வதெல்லாம் உண்மை', 'நிஜங்கள்'. ஆனால், அங்கெல்லாம் உண்மை பேசப்படுகிறதா..? 
 
நிகழ்ச்சியில் கலந்துகொள்பவரை மிரட்டுவதற்கும், சட்டையைப் பிடித்து உலுக்குவதற்கும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? 
 
டி.ஆர்.பி ரேட்டிங் என்பது ஆரோக்கியமான போட்டிதான். ஆனால், சமூக அக்கறையும் அதில் வேண்டும். கூடவே, நிகழ்ச்சி நடத்துபவர்கள் தாங்கள் பிரபலமாக வேண்டும் என்பதற்காக, அளவுக்கு மீறிச் செல்லக்கூடாது என்று கூறியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சசிகலாவிற்கு ஆதரவான கோஷம் - ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அதிருப்தி

அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சசிகலாவிற்கு ஆதரவாக சில அதிமுகவினர் ...

news

கோலி, அனுஷ்கா நிச்சயதார்த்தம் ஜனவரி-1?

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் தொடர் கேப்டன் விராட் கோலி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை ...

news

பழைய ரூபாய் நோட்டு விவகாரம்: சிறை தண்டனை வாபஸ்

டிசம்பர் 31ஆம் தேதியில் இருந்து பழைய ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால் குறைந்தப்படசம் ...

news

நீங்கதான் நியாயம் கேட்கணும் : அதிமுக கரை வேட்டியுடன் ஸ்டாலினை சந்தித்த தொண்டர்கள்

ஜெ.வின் சமாதியை பார்க்க வந்த சில அதிமுக விசுவாசிகள், கோபாலபுரம் சென்று மு.க.ஸ்டாலினை ...

Widgets Magazine Widgets Magazine