தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு: 31 அமைச்சர்கள் இடம்பெற்றனர்!

தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு: 31 அமைச்சர்கள் இடம்பெற்றனர்!


Caston| Last Modified வியாழன், 16 பிப்ரவரி 2017 (15:36 IST)
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று மாலை 4 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்க உள்ளது. இந்நிலையில் 31 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

 
 
இன்று காலை எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வராக பதவியேற்க அழைப்பு விடுத்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். இதனையடுத்து உடனடியாக பதவியேற்புக்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. புதிய அமைச்சரவை பட்டியலை துணை பொதுச்செயலாளர் தினகரனுடன் சேர்ந்து எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தயாரித்தனர். இந்த பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.
 
அமைச்சரவை பட்டியல்:-
 
1. எடப்பாடி பழனிச்சாமி - முதல்வர், நிதித்துறை, பொதுப்பணித்துறை உள்துறை உள்ளிட்ட பல துறைகள்.
2. திண்டுக்கல் சீனிவாசன் - வனத்துறை.
3. செங்கோட்டையன் - பள்ளி கல்வித்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை
4. செல்லூர் ராஜூ - கூட்டுறவு துறை
5. தங்கமணி - மின்துறை மற்றும் மதுவிலக்கு
6. வேலுமணி - உள்ளாட்சி துறை
7. ஜெயக்குமார் - மீன்வளத்துறை
8. சண்முகம் - சட்டத்துறை
9. அன்பழகன் - உயர்கல்வி
10. சரோஜா - சமூக நலத்துறை
11. சம்பத் - தொழில்துறை
12. கருப்பண்ணன் - சுற்றுசூழல்
13. காமராஜ் - உணவு மற்றும் சிவில் சர்வீஸ் பொதுவிநியோகம்
14. ஓ.எஸ்.மணியன் - கைத்தறி மற்றும் ஜவுளித்துறை
15. உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டுவசதி மற்றும் நகர மேம்பாடு
16. விஜயபாஸ்கர் -சுகாதாரத்துறை
17. துரைக்கண்ணு - விவசாயத்துறை
18. கடம்பூர் ராஜூ- செய்தி துறை
19. உதயகுமார் - வருவாய்த்துறை
20. வெள்ளமண்டி நடராஜன் - சுற்றுலா துறை
21. வீரமணி - வணிக வரித்துறை
22. ராஜேந்திரபாலாஜி - பால்வளத்துறை
23. பெஞ்சமின் - ஊரக தொழில்துறை
24. நிலோபர் கபில் - பணியாளர்நலத்துறை
25. எம்.ஆர்.விஜயபாஸ்கர் - போக்குவரத்து துறை
26. மணிகண்டன் - தகவல் தொழில்நுட்பத்துறை
27. ராஜலட்சுமி - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை
28. பாஸ்கரன் -காதித்துறை
29. சேவூர் ராமச்சந்திரன் -அறநிலையத்துறை
30. வளர்மதி - பிற்பட்டோர் நலத்துறை
31. பாலகிருஷ்ண ரெட்டி- கால்நடைத்துறை.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :