Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெயிலுக்கு போய் ஜெயிலுக்கே லஞ்சம் கொடுத்தா அது சசிகலா; தெறிக்கவிடும் நெட்டிசன்கள்


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 18 ஜூலை 2017 (13:30 IST)
பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு அங்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக வெளியான புகாரை தொடர்ந்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் சசிகலாவை வைத்து கேலி செய்து வருகின்றனர்.

 

 
பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு அங்கு சிறப்பு வசதிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக புகார் வெளியானது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த டிஐஜி ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
 
இதையடுத்து சசிகலா சிறையில் சகல வசதிகளுடன் இருக்கும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் நெட்டிசன்கள் சசிகலாவை வைத்து மீம்ஸ் போட்டு கேலி செய்து வருகின்றனர். ஓபிஎஸ் ராஜினாமா செய்த பிறகு சசிகலா நெட்டிசன்களிடன் வசமாக சிக்கினார்.
 
அவர் சிறை சென்றதும் நெட்டிசன்களிடம் சிக்காமல் இருந்தார். தற்போது மீண்டும் சிக்கியுள்ளார். சுமாவே மீம்ஸ் போட்டு கேலி செய்யும் நெட்டிசன்களுக்கு வீடியோ ஆதரத்துடன் வெளியானது வசதியாக அமைந்துவிட்டது. 
 
டுவிட்டரில் உலா வரும் ஒரு சில பதிவுகள்:-
 
லஞ்சம் கொடுத்து ஜெயிலுக்கு போனா அது தினகரன்
ஜெயிலுக்கு போயி ஜெயிலுக்கே லஞ்சம் கொடுத்தா அது சசிகலா
 
உலகத்திலேயே கைதிகளுக்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொடுத்த தலைவிய பாத்துருக்கியா?
 
தமிழ்நாடு மட்டுமில்லேடா.. கர்நாடகாவிலும்...நாங்க தான் கிங்கு... அடிச்சோம் பாரு டிரான்ஸ்பர்...#ரூபா
 
இப்படி எதுகை மோனையில் ஏராளமான வசனங்களுடன் சசிகலவை கேலி செய்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :