வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 26 டிசம்பர் 2018 (16:19 IST)

இட்லி மீம்ஸ், அதிமுக வுக்கு புது விளக்கம் – நெட்டிசன்ஸ் அலப்பறை

அ.இ.அ.தி.மு.க. வுக்கு புது விளக்கம் அளித்து அதை சமூக வலைதளங்களில் வேகமாகப் பரப்பி வருகின்றனர் நெட்டிசன்ஸ்

அ.இ.அ.தி.மு.க. சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பின் மர்மம் குறித்துப் பலவிதமான கருத்துகள் உலாவந்து கொண்டிருக்கின்றன. அப்போல்லோவில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது அவரை சந்திக்க கட்சி நிர்வாகிகள் உள்பட யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை.

அப்போல்லோவில் 75 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு மர்மமான முறையில் இறந்ததையடுத்து, அவரது மரணத்தில் இருக்கும் மர்மங்களைக் கண்டறிய ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் விசாரணைக் கமிஷன் ஒன்றை தமிழக அரசு அமைத்தது. அந்த கமிஷன் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், அளிக்கப்பட்ட உணவுகள், மொத்த மருத்துவ செலவு  குறித்து விளக்கம் அளிக்கக் கோரி அப்போல்லோ நிர்வாகத்திடம் கேட்டது.

அதற்குப் பதிலளித்த அப்போல்லோ நிர்வாகம் ஜெயலலிதாவின் மொத்த மருத்துவ செலவை வெளியிட்டது. அதில் உணவு செலவு மட்டும் ஒரு கோடி என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைக் கேட்டு அதிர்ந்த இணைய உலகம் ஜெயலலிதா சப்பிட்ட இட்லியின் விலை ஒரு கோடியா என மீம்ஸ் போட்டுக் கோபத்தைத் தணித்தது. இதையடுத்து நெட்டிசன்கள் சிலர் அ.இ.அ.தி.மு.க வுக்கு ப்புது விளக்கம் அளித்துள்ளனர். அ’ப்போல்லோஇ’ட்லியை ’அ’ம்மாவ ’தி’ங்கவெச்சு ’மு’டிச்சக் ’க’ழகம் எனப் புதுப்பெயர் சூட்டி பேஸ்புக்கிலும் வாட்ஸ் ஆப்பிலும் பகிர்ந்து வருகின்றனர்.