வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 10 பிப்ரவரி 2016 (09:52 IST)

நேதாஜி பிறந்த நாளை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க கோரிய வழக்கு: மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளை, தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க உத்தரவிடக் வேண்டும் என்று கோரிய மனு குறித்து, 8 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

 
சென்னை உயர் நீதிமன்றத்தில், கே.கே.ரமேஷ் என்பவர் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்தார்.
 
அந்த மனுவில், "நேதாஜியின் தியாகங்களைக் கருத்தில் கொண்டு அவருக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும்.
 
அவருக்கு மணிமண்டமும், அவரது வாழ்க்கை வரலாறு குறித்த அருங்காட்சியகத்தை புது டெல்லியிலும், மாநில தலைநகரங்களிலும் அமைக்க வேண்டும்.
 
நேதாஜியின் பிறந்த தினத்தை தேசிய விடுமுறை தினமாகவும் அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து 8 வாரங்களுக்குள் மத்திய அரசு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.விமலா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.