Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஈயத்தை பார்த்து பித்தளை இளிச்சிதாம்: நிர்மலா சீதாராமனை வச்சு செஞ்ச நெட்டிசன்கள்!

Last Updated: செவ்வாய், 9 ஜனவரி 2018 (12:48 IST)
திருவையாறு தியாகராஜர் ஆராதனை ஒளிபரப்பானபோது தூர்தர்ஷன் தொலைக்காட்சி விளம்பரம் போட்டதால், கோபமடைந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது அதிருப்தியை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
 
தனது டுவிட்டர் பதிவில் அமைச்சர் நிர்மலா சீதாராமன், தூர்தர்ஷன் தியாகராஜர் ஆராதனையின் போது விளம்பரம் போட்டதை விமர்சித்ததை அடுத்து, அதில் நெட்டிசன்கள் குவிந்து நிரமலா சீதாராமனை விமர்சித்து வருகின்றன.
 
குறிப்பாக ஓகி புயல் குறித்து பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மீனவன் சாக கிடக்கும்போது அரசு நிர்வாகம் செயல் இழந்து கிடந்தப்ப இதே வேகத்துல நடவடிக்கை எடுத்துதிருக்கலாமே? என ஒரு நெட்டிசன் கூறியுள்ளார்.
 
ஈயத்தை பார்த்து பித்தளை இளிச்சிதாம் எனவும் தீபாராதனைக்கு காட்டிய வேகம் மக்களுக்கு உதவியதிலும் காட்டியிருக்கலாம் என ஒருவரும் கூறியுள்ளார்.
 
நீங்கள் திருவையாறில் இருந்து ஒளிபரப்பாகும் ஆரதனையின் குறுக்கீடுக்கு வருந்துகிறீர்கள். அதே நேரத்தில் அதே திருவையாறுக்கு காவிரி நீர் நீண்ட காலமாக சரியாக வராமல் உள்ளது. மேலும் நீங்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை நிறுத்த பிரதமருக்கு மனு அளித்துள்ளீர்கள். வரலாறு முக்கியம் என ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இதே போன்று பல நெட்டிசன்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த டுவிட்டில் தங்கள் ஆதங்கங்களை கொட்டி வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :