Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பெரும்பான்மையை நிரூபிக்க 101 உறுப்பினர்களே போதும் - புதிய தகவல்


Murugan| Last Modified வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (17:45 IST)
நாளை கூட உள்ள சட்டமன்ற பேரவையில், எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ளார்.

 

 
தமிழக மொத்த சட்ட மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 234 பேர். இதில், ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதால் அந்த எண்ணிக்கை 233 ஆக குறைந்துள்ளது. இதில் சபாநாயகர் தவிர்த்து மொத்தம் 232 பேர் இருக்கிறர்கள். இதில் ஆட்சி அமைக்க  பாதிக்கு மேல், அதாவது 117 உறுப்பினர்களின் ஆதரவு அவசியம்.
 
அதேசமயம் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு பதிலாக, சட்டசபையில் உள்ள உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு உள்ளது என நிரூபித்தாலே போதுமானது என ஆளுநர் சலுகை வழங்கலாம் என்பது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அதன்படி, ஒரு வேளை சட்டமன்றத்திற்கு சில எம்.எல்.ஏக்கள் வராமல் இருந்து, மொத்தம் 200 உறுப்பினர்கள்தான் இருக்கிறார் எனில், 101 பேரின் ஆதரவு இருந்தாலே ஒருவர் முதல்வராக முடியும். 117 பேரின் ஆதரவு தேவையில்லை. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால், 356 பிரிவின் கீழ் ஆட்சி கலைக்கப்படும்.


இதில் மேலும் படிக்கவும் :