Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சாராய ஆலைகளுக்காக திமுகவுடன் சசிகலா தொடர்பு: போட்டுடைத்த நத்தம் விஸ்வநாதன்


bala| Last Modified வியாழன், 9 பிப்ரவரி 2017 (11:19 IST)
தமிழக அரசியல் நிலவரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யார் ஆட்சி பொறுப்பேற்பார்கள் என்று ஆயிரம் டால்ர் கேள்விகளுடன் அனைவரும் காத்திருக்கின்றனர்.

 

முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தை பொறுத்தவரை தமக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உண்டு எனக் கூறிவருகிறார். ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மதியம் சென்னை வரும் சூழ்நிலையில் சசிகலா இன்று மாலை 5 மணிக்கு அவரை சந்திப்பார் என்று கூறப்படுகிறது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பொதுச் செயலாளர் சசிகலா கூறும்போது, திமுகவுடன் கூட்டு சேர்ந்து பன்னீர் செல்வம் செயல்படுகிறார் என்று குற்றச்சாட்டை கூறினார்.

இந்த நிலையில் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியபோது, எங்களுக்கு திமுகவினர் யாருடனும் எவ்வித தொடர்பும் கிடையாது. ஆனால் திமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதாவுக்கு பிடிக்கவில்லை என்றாலும் அதனையும் மீறி மிடாஸ் சாராய ஆலைக்காக திமுகவினருடன் சசிகலா தொடர்பு வைத்திருந்தார் என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :