Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சசிகலா கணவர் கவலைக்கிடம்: மருத்துவமனை அறிக்கை கூறுவதென்ன?


sivalingam| Last Modified செவ்வாய், 3 அக்டோபர் 2017 (00:54 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவின் கணவர் நடராஜன் கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக குளோபல் சிட்டி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


 
 
அந்த அறிக்கையில் நடராஜன் உடல்நிலை தொடர்ந்து மோசமாகவே உள்ளதாகவும், கடந்த 9 மாதங்களாக கல்லீரல் மற்றும் கிட்னி பிரச்னைகளுக்காக சிகிச்சை பெற்று வரும் அவரது கல்லீரல் தற்போது மோசமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
கல்லீரல் இன்டன்சிவ் கேர் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜனுக்கு கிட்னி பாதிப்பு, நுரையீரல் பாதிப்பும் ஆகியவை உள்ளதால், அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், தற்போது அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இதில் மேலும் படிக்கவும் :