இரட்டை இலைச் சின்னம் மோடி கையில் உள்ளதா? - பொன்னார் பதிலடி


லெனின் அகத்தியநாடன்| Last Updated: சனி, 18 மார்ச் 2017 (10:49 IST)
பாஜகவிடம் வெற்றிச்சின்னமான தாமரை சின்னம்தான் உள்ளது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

இரட்டை இலைச் சின்னத்தை தக்க வைப்பதில் சசிகலா அணிக்கும், ஓ.பி.எஸ். அணிக்கும் இடையே பலத்த போட்டி நடைபெறுகிறது. இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் ’அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்திடமோ, பன்னீர்செல்வத்திடமோ இல்லை, மோடியின் கையில் இருப்பதாக கருதுகிறேன்’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இது குறித்து கூறியுள்ள பொன்.ராதாகிருஷ்ணன் “இரட்டை இலை சின்னம் மோடியின் கையில் உள்ளது என்று சில தலைவர்கள் பேசி வருகின்றனர். பாரதிய ஜனதாவிடம் வெற்றிச்சின்னமான தாமரை சின்னம் உள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும் கூறிய அவர், ‘தமிழக பட்ஜெட்டில் மக்களுக்கு பயன்தரும் எந்த திட்டங்களும் இல்லை. தமிழகத்துக்கு போதிய நிதியை மத்திய அரசு தரவில்லை என்று ஆட்சியாளர்கள் குறை கூறுகின்றனர்.

ஆனால் மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய வருவாயை முறையாக வசூலிப்பதற்கும், வருவாயை அதிகரித்துக்கொள்வதற்கும் எந்தவிதமான நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கவில்லை. மத்திய அரசை பொறுத்தவரையில் தமிழகத்துக்கு முறைப்படி நிதியை எந்தவித குறைபாடும் இன்றி கொடுத்துக்கொண்டு இருக்கிறது’ என்று தெரிவித்தார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :