வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: திங்கள், 29 ஜூன் 2015 (18:41 IST)

பாஜக தற்போது ஊழலில் சிக்கி தவிக்கிறது - நாராயணசாமி

ஊழலற்ற ஆட்சி எனக் கூறி பதவிக்கு வந்த பாஜக தற்போது ஊழலில் சிக்கி தவிக்கிறது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் வி.நாராயணசாமி கூறியுள்ளார்.
 
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஊழலற்ற ஆட்சி எனக் கூறி பதவிக்கு வந்த பாஜக தற்போது ஊழலில் சிக்கி தவிக்கிறது. தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட லலித்மோடிக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் உதவி உள்ளனர். வசுந்தரா ராஜே மகன் துஷ்யந்த் வர்த்தக நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளார். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது கல்வித்தகுதியை தவறாக காண்பித்துள்ளார்.
 
அவர்கள் மூவரையும் பதவி விலகச் செய்ய வேண்டும், இல்லை நீக்க வேண்டும். பிரதமர் மோடி எதுவும் கூறாமல் மௌனியாகி விட்டார். பாஜக மூத்த தலைவர் அத்வானி குற்றம் சாட்டப்பட்ட அரசியல் தலைவர்கள் தார்மீக முறையில் செயல்பட வேண்டும் எனக்கூறியுள்ளார். ஆனால் பாஜகவோ குற்றம் சாட்டப்பட்ட தலைவர்களை பாதுகாத்து வருகிறது என்றார் நாராயணசாமி.