Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அவல் எங்கே கிடைக்கிறது என ஏங்கும் ஸ்டாலின்: நாஞ்சில் சம்பத் கிண்டல்!

அவல் எங்கே கிடைக்கிறது என ஏங்கும் ஸ்டாலின்: நாஞ்சில் சம்பத் கிண்டல்!


Caston| Last Modified திங்கள், 17 ஜூலை 2017 (15:37 IST)
நடிகர் கமல்ஹாசன் விவகாரம் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வாய்க்கு கிடைத்த அவல் என தினகரன் அணியை சேர்ந்த நாஞ்சில் சம்பத் கிண்டலடித்துள்ளார்.

 
 
நடிகர் கமல் தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது என சில தினங்களுக்கு முன்னர் பேட்டியளித்தார். அவ்வளவு தான் தமிழக அமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவராக நடிகர் கமலை விமர்சித்தும், மிரட்டும் தொனியிலும் பேசி வருகின்றனர்.
 
தொடர்ந்து அமைச்சர்கள் கமல்ஹாசன் மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்தி வருவதால் கமலுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் தலைவரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நேற்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு கமலுக்கு ஆதரவை தெரிவித்தார்.
 
இதனையடுத்து நடிகர் கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார். இந்நிலையில் இது குறித்து பேசிய தினகரனின் தீவிர ஆதரவாளர் நாஞ்சில் சம்பத், தமிழக அரசின் துறைகளில் ஊழல் நடக்கிறது என்றால் யார் செய்கிறார்கள் என்பதை கமல் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றார்.
 
மேலும் அவல் எங்கே கிடைக்கிறது என ஸ்டாலின் ஏங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் கமல் சர்ச்சையில் சிக்கிக்கொள்கிறார் என்றார். தொடர்ந்து பேசிய அவர் தமிழ் திரைப்படங்களுக்கு உலக அரங்கில் அங்கீகாரம் கிடைக்கும் எனில் அது நடிகர் கமலால் மட்டுமே என புகழ்ந்தார்.


இதில் மேலும் படிக்கவும் :