Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சின்னம்மாவின் ஆணைக்கிணங்க.. நாஞ்சில் சம்பத் அந்தர் பல்டி


Murugan| Last Modified சனி, 7 ஜனவரி 2017 (11:57 IST)
பிரச்சாரப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் இன்று காலை போயஸ் கார்டன் சென்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார்.

 

 
ஜெ.வின் மறைவுக்கு பின், நாஞ்சில் சம்பத் அதிமுகவில் பெரிதாக தலைகாட்டவில்லை. அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள், சசிகலா பின்னால் சென்ற போதும் இவர் போயஸ்கார்டன் பக்கமே செல்லவில்லை. மேலும், சசிகலாவிற்கு எதிராக பல்வேறு கருத்துகளை கூறியதோடு, தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பினார்.
 
இந்நிலையில் இன்று காலை போயஸ் கார்டன் சென்று சசிகலாவை அவர் சந்தித்து பேசினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “சின்னம்மாவின் ஆணைகளை ஏற்று தமிழகம் முழுவதும் மிகவும் தீவிரமாக சுற்றுப்பயணம் மேற்கொள்வேன்” எனக் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :