செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 6 ஜனவரி 2017 (14:08 IST)

சசிகலா பொதுச் செயலாளர் ஆனதை 63 % பேர் எதிர்க்க காரணம் என்ன?

சசிகலா பொதுச்செயலாளர் ஆனதை வரவேற்கிறீர்களா, எதிர்க்கிறீர்களா என்ற கேள்விக்கு 63 சதவீதத்தினர் எதிர்ப்பதாக கூறியுள்ளனர்.


 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா அடுத்த தேர்வு செய்யப்பட்டதாக அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து அவர் டிசம்பர் 31ஆம் தேதி பொதுச்செயலாளராக அதிமுக அலுவலகத்தில் பதவி ஏற்றுக் கொண்டார்.

இந்நிலையில், சசிகலா பொதுச்செயலாளராக பதவியேற்றது குறித்து  ’நக்கீரன்’ வார இதழ் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. சசிகலா பொதுச்செயலாளர் ஆனதை வரவேற்கிறீர்களா, எதிர்க்கிறீர்களா என்ற கேள்விக்கு 63 சதவீதத்தினர் எதிர்ப்பதாகவும், 27 சதவீதத்தினர் எதிர்ப்பதாகவும் கூறியுள்ளனர். 10 சதவீதம் பேர் கருத்து இல்லை என்று கூறியுள்ளனர்.

அதேபோல், சசிகலாவை ஏன் எதிர்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, ஜெ.வின் மரணத்திற்கு காரணமானவர் என்று 26 சதவீதத்தினரும், 22 சதவீதத்தினர் ஜெ.வுக்கு இணையானவர் இல்லை என்றும், 13 சதவீதத்தினர் ஜெ.வின் அண்ணன் மகள் வர வேண்டும் என்றும், 10 சதவீதத்தினர் ஊழல், அராஜகங்களுக்கு காரணம் என்றும், 10 சதவீதத்தினர் சாதி ஆதிக்கம் அதிகமாகும் என்றும், 8 சதவீதத்தினர் ஓ.பி.எஸ். போன்ற தலைவர்கள் வரவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

மேலும், தேர்தல் வந்தால் இரட்டை இலைக்கு வாக்களிப்பீர்களா என்ற கேள்விக்கு 52 சதவீதத்தினர் இல்லை என்றும், 37 சதவீதத்தினர் ஆம் என்றும், 11 சதவீதத்தினர் மற்ற கருத்துக்களையும் கூறியுள்ளனர்.