வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : சனி, 6 பிப்ரவரி 2016 (14:41 IST)

வானிலிருந்து விழுந்து, பயங்கர சத்தத்துடன் வெடித்த மர்ம பொருள் : வேலூரில் பரபரப்பு

வேலூர் மாவட்டம் நாட்றாம் பள்ளி அருகே உள்ள பாரதிதாசன் கல்லூரி வளாகத்தில் மர்ம பொருள் ஒன்று வானிலிருந்து விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் ஒருவர் உயிரிழ்ந்துள்ளார் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.


 

 
வேலூர் மாவட்டத்தில் உள்ள நாட்றாம் பள்ளியில் பாரதிதாசன் கல்லூரி செயல்பட்டு வருகின்றது.
 
இந்நிலையில், அந்த கல்லூரி வளாகத்தில் திடீரென ஒரு மர்மப் பொருள் வானிலிருந்து விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
 
இதனால், அந்த கல்லூரி வளாகத்தில் நிறுத்தப்பட்டிந்த வாகனங்களின் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன. அத்தடன், கல்லூரியில் இருந்த கண்ணாடிகளும் நொறுங்கி விழந்துள்ளன.
 
அப்போது, அங்கிருந்த பேருந்து ஓட்டுநர் ஒருவர் பலத்த காயங்களுடன் உயிரிழந்தார்.
 
அத்துடன், அந்த கல்லூரிக்கு அருகில் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த  3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மருத்துவமனைன்கு கொண்டு செல்லப்பட்ட அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
 
அந்த மர்மப் பொருள் விழுந்த இடத்தில் 5 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருவகின்றனர்.
 
அந்த பொருள் வெடிகுண்டைப் போல இருந்ததாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.