1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 2 மார்ச் 2015 (12:07 IST)

மனைவியின் நிர்வாணப் படங்களை அனுப்பி தொழிலதிபரிடம் பணம் கேட்டு மிரட்டல்

சேலத்தில் மர்ம ஆசாமி ஒருவர், வெள்ளிப் பட்டறை அதிபருக்கு அவரது மனைவியின் ஆபாச படங்களை அனுப்பி ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார்.
 
சேலம் செவ்வாய் பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெள்ளி பட்டறை அதிபரின் வீட்டு வாசலில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கவர் ஒன்று கிடந்துள்ளது. அந்த கவரில் அவரது மனைவி வேறு ஒரு வாலிபருடன் நிர்வாண கோலத்தில் உல்லாசமாக இருப்பது போன்ற 3 புகைப்படங்கள் இருந்தது.
 
இதைக் கண்டதும் தொழிலதிபர் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், அந்த படங்களை இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க 3 லட்ச ரூபாய் தர வேண்டும் என குறிப்பிட்டு அதில் செல்போன் நம்பரும் எழுதப்பட்டிருந்தது.
 
இது குறித்து செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் ராஜா புகார் செய்தார். இதையடுத்து போலீசார் அந்த படத்தை ஆய்வு செய்ததில் மார்பிங் செய்து வேறு ஒரு பெண்ணின் படத்தில் ராஜாவின் மனைவியின் தலையை எடுத்து இணைத்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.