Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

என் கணவரை காணவில்லை: சசிகலா புஷ்பா


Abimukatheesh| Last Updated: புதன், 28 டிசம்பர் 2016 (21:46 IST)
இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுகவினரால் கடுமையாக தாக்கப்பட்ட என கணவர், இப்போது  வரை எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

 

 
சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் அவரின் வழக்கறிஞர் ஆகியோர் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் அவரின் வழக்கறிஞர், அதிமுகவினரால் சராமாரியாக தாக்கப்பட்டனர். இதில் அவரக்ளுக்கு மண்டை உடைந்து ரத்தம் கசிந்தது. 
 
இதையடுத்து தன் கணவரை காணவில்லை என்று சசிகலா புஷ்பா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்ற என கணவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இப்போது வரைக்கும் அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை. காலையில் இருந்து எனது கணவரை தேடிக்கொண்டிருக்கிறேன். இது மனித உரிமை மீறல் என கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :