வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: வெள்ளி, 13 மே 2016 (14:32 IST)

மீண்டும் முல்லைப் பெரியார் அணை பிரச்சனை: அணையை மூடக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்

முல்லைப் பெரியார் அணையை மூடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் கேரள வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார்.


 
கேரளா மாநில அரசு, முல்லை பெரரியார் அணை மிகவும் பழமையானதால் அதை இடித்து புதுபிக்க வேண்டும் என்று தெரிவித்ததுடன், புதுப்பித்தல் மூலம் அணையை தங்கள் கட்டுப்பாடுக்கு கொண்டு வந்துவிடலாம் என்று எண்ணியது.
 
இதைத்தொரடர்ந்து தமிழக அரசு முல்லை பெரியார் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கோரி வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நிபுணர்கள் குழுவைக் கொண்டு ஆய்வு செய்து, அணை பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்து,  நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. 
 
அந்த தீர்ப்பை எதிர்த்து கேரளா சார்பில் தாக்கல் செய்த சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.   
 
இந்நிலையில் தற்போது வழக்கறிஞர் கேரள ரஸல் ஜாய் என்பவர்  மீண்டும் முல்லைப் பெரியார் அணையை மூடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
 
அந்த மனுவில் அவர்,
 
முல்லைப் பெரியாறு அணை மிகவும் பலவீனமாக இருப்பதால் அணை உடைந்து விபத்து ஏற்படும் வாப்புள்ளாது. அப்படி விபத்து ஏற்பட்டால் அணையின் கீழ் பகுதியில் உள்ள மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதிப்பு ஏற்படும்.
 
அணையை பலவீனமாக வைத் திருப்பது மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயலாகும். அணையை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் சர்வதேச நிபுணர்கள் யாரும் இடம்பெறவில்லை. 
 
அமெரிக்க கூட்டாட்சி விதிகளின்படி, சர்வதேச நிபுணத்துவம் பெற்ற வல்லுனர்கள் கொண்ட குழுவை அமைத்து அணையை ஆய்வு செய்து அணையை மூட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத் தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை 120 ஆண்டுகள் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது.