Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கிணற்றை காணோம் காமெடி நடிகர் வெட்டிப் படுகொலை - நெல்லையில் பரபரப்பு


Murugan| Last Updated: புதன், 4 ஜனவரி 2017 (10:36 IST)
காமெடி நடிகர் வடிவேலுடன் சேர்ந்து நடித்த துணை நடிகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 
நெல்லை மாவட்டம், ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ்(55).  இவர் சாமி, ஐயா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். முக்கியமாக, ‘கிணற்றை காணோம்’ காமெடி காட்சியில் நடிகர் வடிவேலுவுடன், வழக்கறிஞராக இவர்  நடித்துள்ளார். இவர் ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வந்தார்.
 
சம்பவத்தன்று இரவு,  இவர் தன்னுடைய கடையை பூட்டி விட்டு, தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் ஒன்று அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. அதில் அவர் அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
 
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கொலை செய்த மர்ம நபர்களை தேடிவருகின்றனர். மோகன்ராஜும் அவரும் தம்பியும் சேர்ந்து 1991ம் ஆண்டு சிவலார்குலத்தைச் சேர்ந்த ஒருவரை வெட்டிக் கொலை செய்தனர். அதனைத் தொடர்ந்து, இவரின் தம்பியை ஒரு மர்ம கும்பல் 1997ம் ஆண்டு வெட்டிக் கொலை செய்தனர். தற்போது அவர்கள்தான் மோகன்ராஜையும் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
 
மோகன்ராஜின் கொலை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :