வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 13 அக்டோபர் 2014 (15:49 IST)

மவுலிவாக்கம் கட்டட விபத்து: அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

மவுலிவாக்கம் கட்டட விபத்து தொடர்பாக தமிழக அரசு விரிவான அறிக்கையை வரும் டிசம்பர் 4 ஆம் அன்று தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
மவுலிவாக்க கட்டட விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
இந்த வழக்கு விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடை பெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் மவுலிவாக்கம் கட்டட விபத்து தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த விபத்து தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கவுல் ரெகுபதி தலைமையிலான ஒரு கமிஷனின் விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
 
அப்போது ரெகுபதி தலைமையிலான ஒரு கமிஷனின் விசாரணை அறிக்கை அவசரகோலத்தில் தயாரிக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரரின் வழக்கறிஞர் எதிர்ப்புத் தெரிவித்தார்.
 
இதனையடுத்து, இந்த சம்பவத்தின் காரணம் குறித்தும், விபத்திற்குப் பிறகு தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு, நிவாரண உதவிகள், ஆய்வு நடவடிக்கைகள், கட்டட உரிமையாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விரிவான அறிக்கையை வரும் டிசம்பர் 4 ஆம் தேதியன்று தாக்கல் செய்ய வேண்டுமென்ன்றும் கூறி, வழக்கை நீதிபதி அன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.