Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

குழந்தைக்கு விடுமுறை வேண்டுமென பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தாய்

Bomb Threat
Abimukatheesh| Last Updated: சனி, 11 நவம்பர் 2017 (13:20 IST)
மதுரையில் தாய் ஒருவர் தனது பிள்ளைகள் தன்னுடன் வீட்டில் இருக்க வேண்டுமென பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 
மதுரை சிம்மக்கல் வைகை தென்கரை பகுதியில் சாரதா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி அலுவலகத்திற்கு நேற்று காலை 7.35 மணிக்கு தொலைப்பேசியில் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய பெண் ஒருவர் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சற்று நேரத்தில் வெடிக்கும் என்றும் கூறியுள்ளார்.
 
இதையடுத்து அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். உடனே வெடிகுண்டு தடுப்பு காவல்துறை பிரிவினர் மோப்ப நாயுடன் விரைந்து வந்தனர். பள்ளிக்கு வர தொடங்கிய மாணவர்களை பள்ளிக்குள் அனுமதிக்க காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.
 
பள்ளி முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அதில் வெடி குண்டு இல்லாதது தெரியவந்தது. வெகு நேரம் நடத்தப்பட்ட சோதனையால் அப்ப்குதியில் மக்கள் கூட்டம் குவிந்தது. இதனால் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
 
இதையடுத்து தொலைப்பேசி அழைப்பு வந்த எண்ணை வைத்து நடத்தப்பட்ட விசாரணைக்கு பெண் ஒருவர் சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தான் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், தனது பிள்ளைகள் பள்ளிக்கு செல்லாமல் தன்னுடன் வீட்டில் இருக்க வேண்டுமென நினைத்தேன். அதனால் பள்ளிக்கு விடுமுறை விட என்பதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தேன் என கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :