Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கூவத்தூர் பேரம்: திருநெல்வேலி அல்வா கொடுத்து சரவணனை கவுத்த மூன் டிவி!

கூவத்தூர் பேரம்: திருநெல்வேலி அல்வா கொடுத்து சரவணனை கவுத்த மூன் டிவி!

வெள்ளி, 16 ஜூன் 2017 (13:36 IST)

Widgets Magazine

அதிமுகவின் மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் கூவத்தூரில் எம்எல்ஏக்கள் பேரம் குறித்து பேசிய வீடியோவை மூன் டிவி டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் உதவியுடன் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.


 
 
தமிழக அரசியலிலும், சட்டசபையிலும் புயலை கிளப்பி வரும் இந்த வீடியோவை எப்படி எடுத்தோம் என்பதை மூன் டிவியின் நிர்வாக இயக்குனர் ஷநவாஸ் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விளக்கியுள்ளார்.
 
சரவணன் ஒரு சிவில் இன்ஜினியர் என்பதால் அவரை கட்டுமான பணி பற்றிய ஒரு ஆலோசனைக்கு அழைப்பதாக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தங்கள் அலுவலகத்தில் வரவழைத்துள்ளனர் அவர்கள்.
 
அலுவலகத்தில் வந்த சரவணனுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்று அவருடன் கேஷுவலாக பேசி தகவலை பெற்றுள்ளனர். சரவணன் வருவது பேசுவது எல்லாமே அவர்களது அலுவலக கேமராவில் பதிவாகியிருக்கிறது.
 
ஏப்ரல் 1-ஆம் தேதி அதாவது முட்டாள்கள் தினத்தில் முதன் முதலில் மூன் டிவி அலுவலகத்துக்கு வந்த சரவணன் அதன் பின்னர் 6-ஆம் தேதியும் வந்துள்ளார். பின்னர் திருநெல்வேலி செல்வதாக கூறிய சரவணனுடன் மூன் டிவியின் நிர்வாக இயக்குனர் ஷநவாஸும் சென்றுள்ளார்.
 
திருநெல்வேலியில் உள்ள தங்கள் செய்தியாளரிடம் சொல்லி இரண்டு கிலோ திருநெல்வேலி அல்வா வாங்கி எம்எல்ஏ சரவணனுக்கு கொடுத்ததாக கூறி சிரிக்கிறார் ஷநவாஸ்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஆன்லைன் மோசடியில் முதலிடம் - சென்னையில் ஒரே ஆண்டில் ரூ.16 கோடி சுருட்டல்

இந்தியாவில், ஆன்லைன் மோசடியில் சென்னை முதலிடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

news

திருப்பதி லட்டு வரை சென்ற ஜிஎஸ்டி விலை உயர்வு!!

திருப்பதி தேவஸ்தானம் குறைந்த விலையில் வாடகை அறை, மானிய விலையில் லட்டு, அன்னதானம் ...

news

தினகரனுக்கு 60 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்காம்: மேலும் 24 பேர் தயார் நிலையில்!

அதிமுகவில் டிடிவி தினகரனை ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் அறிவித்த பின்னர் தனது செல்வாக்கை ...

news

அடாவடி செய்த எம்.பி.க்கு சிக்கல் - விமானத்தில் செல்ல தடை

ஆந்திர மாநிலம் தெலுங்கு தேச கட்சி எம்.பி. திவாகர ரெட்டிக்கு, விமானத்தில் செல்ல பல்வேறு ...

Widgets Magazine Widgets Magazine