வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (11:03 IST)

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 50 ஆயிரம் ஊக்கத் தொகை

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று சட்டசபையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 
அனைத்து தனியார் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு சமவாய்ப்பு மற்றும் உரிமைகள் வழங்குவதில் உள்ள பாகுபாட்டை களைவதற்கு உணர்வூட்டும் பயிற்சி திட்டம் மாவட்டம் தோறும் நடத்த அரசு 11,20,000 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் வி. சரோஜா கூறியுள்ளார்.
 
சட்டப்பேரவையில் புதனன்று (ஆக.10) நடைபெற்ற தமது துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசியபோது இந்த அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
 
மேலும், அகில இந்திய குடிமைப் பணிகள் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி 1 முதலான தேர்வுகளில் வெற்றி பெறும் மாற்றுத் திறனாளிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அங்கன்வாடி மையங்களில் ஆரம்பக் கல்வி பயின்று வேறு பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு முன்பருவ கல்விச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
 
தமிழகத்தில் உள்ள 7 கூர்நோக்கு இல்லங்கள் மற்றும் 2 சிறப்பு இல்லங்களில் உள்ள சிறார்களுக்கு ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க 16.20 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.