வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 12 ஏப்ரல் 2017 (15:01 IST)

கையில காசு வாயில தோச: தினகரனுக்கு ஷாக் கொடுத்த நிர்வாகிகள்

பணம் கொடுத்தால்தான் கையெழுத்து போடுவோம் என அதிமுக நிர்வாகிகள் கூறிவருவதால் அதிமுக துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அதிர்ச்சியில் உள்ளாராம்.


 

 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு அந்த தொகுதியில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது குறித்த ஆவணங்கள் வருமான வரித்துறையினர் சோதனையில் சிக்கியது. இதையடுத்து இன்று நடைப்பெற இருந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த விசாரணை வரும் 17ஆம் தேதி நடைப்பெற உள்ளது.
 
இந்த விசாரணையில் தமிழகத்தில் உள்ள அதிமுக நிர்வாகிகள் அனைவரின் கையெழுத்தை பெற்று பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என தினகரன் உத்தரவிட்டு இருந்தார். இந்த பணியில் அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் ஈடுப்பட்டுள்ளனர். 
 
கிளை, ஒன்றியம், வட்டம் உள்ளிட்ட நிர்வாகிகள் கையெழுத்து போட பணம் கேட்டுள்ளனர். கட்சியை காப்பாற்ற எங்கள் கையெழுத்து தேவை என்று வருகிறீர்கள், மற்ற நேரங்களில் சிறு உதவி கேட்டு வந்தால் கூட திருப்பி அனுப்பி விடுகிறீர்கள். அதனால் கையெழுத்து போட பணம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதனால் மாவட்ட நிர்வாகிகள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
 
நிர்வாகிகளின் பதவிக்கு ஏற்ப தொகை வழங்கப்பட்டு கையெழுத்து பெறப்பட்டு வருகிறதாம். இதனால் டிடிவி தினகரன் அதிர்ச்சி அடைந்துள்ளாராம். கடைசி நேரம் என்பதாலும், கையெழுத்து பெறப்பட வேண்டும் என்ற சூழலாலும் கேட்கும் பணத்தை கொடுத்து கையெழுத்து வாங்கி வருகின்றனர்.