மோடி மீண்டும் பிரதமராக தமிழக மக்கள் ஆதரவு தருவார்கள் - மத்திய அமைச்சர் பேச்சு

Ravi Shankar Prasad
Last Modified வியாழன், 14 பிப்ரவரி 2019 (18:25 IST)
தமிழக மக்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு நரேந்திர மோடி மீண்டும் நம் நாட்டின் பிரதமராக வ்ர ஆதரவு அளிப்பார்கள் என்று  மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் தகவ தொலைதொடர்புத்துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
வேலூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரவிஷங்கர் பிரசாத் கூறியதாவது:
 
மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு சிறந்த பணிகளை செய்துள்ளது. எனவே வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழக அரசியலுக்கு அப்பாற்பட்டு மோடி மீண்டும் பிரதமராக வர நிச்சயம் ஆதரவளிப்பார்கள். 
 
காங்கிரஸ் அரசும், திமுகவும் பெரிய ஊழல் கட்சிகளாக உள்ளன, அதனால் அவர்களுக்குள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை குறித்து கருத்து கூற விரும்பவில்லை. தமிகத்தை ஆட்சி செய்யும் எட்டப்பாடி பழனிசாமி, மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் சிறப்பாக ஆட்சி செய்து வருகின்றனர்.  விரைவில் கூட்டணி குறித்த நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :