வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 27 ஆகஸ்ட் 2014 (18:32 IST)

இலங்கை தமிழர்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட மோடி உறுதி: சம்பந்தன் தகவல்

இலங்கையைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்கள், அதன் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இந்தியாவுக்கு வந்துள்ளனர்.
 
கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை அவர்கள் சந்தித்தனர். அப்போது இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை, சமநீதி, வாழ்வாதாரம் கிடைக்க தனது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.
 
இந்நிலையில் சம்பந்தன் தலைமையிலான குழுவினர் இன்று தமிழகம் வந்தனர். தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகத்துக்கு சென்ற அவர்கள், பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
 
அதன் பின் சம்பந்தன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தங்களுக்கு நீதி கிடைப்பதற்கான நடவடிக்கையை பிரதமர் மோடி ஏற்கனவே தொடங்கிவிட்டதாக அவர் கூறினார். தமிழர்கள் பெருமளவில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கவேண்டும் என்று சம்பந்தன் அப்போது குறிப்பிட்டார்.