வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 13 ஏப்ரல் 2017 (13:33 IST)

நீரோவின் இதயமும், மோடியின் இதயமும்

நாடு பார்த்தது உண்டா இந்த நாடு பார்த்தது உண்டா ?

இதயம் என்பது தசைகளாலும், இரத்தங்களாலும், நாளங்களாலும்  ஆனது. அது எளிதில் இளகும் தன்மை உடையது. இது சாதாரண மனிதனுக்கு தான். வரலாற்றில் சில நீரோக்களின் இதயமும், சில ஹிட்லர்களின் இதயமும், கடும் கல்களால் ஆனது. நமது பிரதமர், நீரோவிடம் இதயத்தை இரவலாக பெற்று இருக்கிறார் போலும். அதனால் தான் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை அவர் கண்டு கொள்வதேயில்லை. அவர் மனம் கல்லாகி போனது.




 

இந்த தேசத்தில் அனைவரும் போராடுகிறார்கள் ! அனைவரது போராட்டமும் பிரதமர் கவனத்தை பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை தான். ஆனால் தலை நகரில் விவசாயிகள் தங்களது ஆடைகளை களைத்து போராட்டம் செய்யும் நிலையிலும் கூட பிரதமரின் பாராமுகம்தனை என்ன சொல்வது ?

லட்சம் கோடிகள் அம்பானிகளுக்கும், அதானிகளுக்கும், கார்பரேட்களுக்கும் கடன்களை தள்ளுபடி செய்யும் போது அகல விரிந்த அவர் கண்கள், விவசாயிகள் கடன்கள்  தள்ளுபடி என வரும் போது காந்தாரியைப் போல கண்களை கட்டி கொள்வார் போலும்.வரலாறு காணாத வறட்சி நிலவும் போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேச தம்பி துரையை அழைத்து பேசுகிறார். மைத்திரேயனை அழைத்து பேசுகிறார். ஆனால் விவசாயிகளை அழைத்து பேச மாட்டார். பேச மனம் இல்லையா ? பேச மனம் வரவில்லையா ?

கத்திபாராவில் நடந்து வரும் போராட்டத்தை பார்த்து கொண்டிருப்பார் என்று நம்புகிறேன், இருந்தாலும் கண்களை மூடி கொள்வார். கண்களை மூடி திறப்பவனை நம்பலாம் ! கண்களை வேண்டும் என்றே மூடி கொண்டவனை என்ன சொல்வது !

நிவாரணம் இல்லை. கேட்க ஆள் இல்லை. கேட்க நாதி அற்று டெல்லியின் வீதிகளில் உருளும் விவசாயிகள் என்ன கவுதமியா ? காஜோலா ? பிரதமர் நேரம் ஒதுக்க ?


 

ஒரு ராமன் மட்டும் திரு பிட்சத்தி பவ என யாசகம் கேட்ட காலம் மாறி, அனைத்து விவசாயிகளும் யாசகம் கேட்டால் தான் பிரதமர் பேசுவார் போலும். கொளுத்தும் வெயிலில், மண் சோறு சாப்பிடும்  விவசாயிகள் பற்றி சிறிதும் கவலைப்படாமல் ராஜ்பதி பவனில் குக்குலு ஏசி அறையில் பத்ம விருதுகள் நிகழ்ச்சியில் தேனீர் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார் பிரதமர். எந்த தேசம் இவரை போல ஒரு பிரதமரை இது வரை கண்டதும் இல்லை கேட்டதும் இல்லை.


இரா .காஜா பந்தா நவாஸ் ,
பேராசிரியர் 
[email protected]