வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 6 டிசம்பர் 2016 (13:50 IST)

மறைந்த ஜெயலலிதாவிற்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி

உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிரதமர் மோடி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். 


 

 
கடந்த 75 நாட்களுக்கும் மேல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணியளவில், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
 
அவரின் உடல் தற்போது பொதுமக்கள் பார்வைக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அங்கு கூடியுள்ளனர்.
 
இந்நிலையில், பிரதம் மோடி, ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக தனி விமானம் மூலம் இன்று டெல்லியிலிருந்து சென்னை வந்தார். அதன் பின் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி அரங்கிற்கு வந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெ.வின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அவர் அஞ்சலி செலுத்தினார். மேலும், அங்கிருந்த சசிகலா மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது, அவர்கள் அழுத படி நின்று கொண்டிருந்தனர்.


 

 
மோடியுடன் மத்திய இணை அமைச்சர் வெங்கய நாயுடு, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் உடன் இருந்தனர். 
 
அதன்பின் அங்கிருந்த அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து விட்டு மோடி அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.