வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 29 ஜூலை 2015 (06:03 IST)

சென்னையில் நூதன மோசடி: 40 பவுன் நகையை அபேஸ் செய்த 3 பேர் கைது

சென்னையில், நூதன மோசடியில் ஈடுபட்டு, 40 பவுன் நகையை அபேஸ் செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 

 
சென்னை, கொருக்குப்பேட்டையில் நகைக்கடை நடத்தி வருபவர் மனோகர் லால். இவரது நண்பர் தேஜாராமும் தண்டையார்பேட்டையில் நகை விற்பனை கடை வைத்து உள்ளார். இவர்கள் இருவரும் வியாபாரம் நிமித்தமாக நகைகளை மாற்றி விற்பனை செய்வது வழக்கமாம்.
 
கடந்த 21ஆம் தேதி மனோகர்லால் கடைக்கு வந்த இளைஞர் ஒருவர், தேஜாராம் 40 பவுன் நகை வாங்கி வருமாறு அனுப்பி உள்ளார் என்று கூறியுள்ளார். மேலும், அவரது போன் மூலம் ஜேதாராமிடம், மனோகர் லால் பேசினார். இதனையடுத்து, ரூ.8 லட்சம் மதிப்பிலான 40 பவுன் நகையை அந்த இளைஞரிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்.
 
இந்த நிலையில், ஜேதாராம் வாங்கிய நகைக்கு, மனோகர்லால் பணம் கேட்டுள்ளார். அப்போது, தான் 40 பவுன் நகை வாங்கவில்லை என ஜேதாராம் கூறியுள்ளார்.
 
இந்த சம்பவம் குறித்து, கொருக்குப் பேட்டை காவல் நிலையத்தில் மனோகர் லால் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, நகைக்கடையில் உள்ள கண்காணிப்பு கேரமா மூலம் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
 
இதில், தேஜாராம் கடையில் வேலை செய்த ராஜஸ்தானை சேர்ந்த பகவான் (22), அமர் (21), ராஜேஷ் (21) ஆகியோர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. இதனையடுத்து, அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்நது நகைகளை மீட்டனர்.