வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 30 ஜூன் 2016 (18:50 IST)

சுவாதி கொலை தொடர்பாக தகவல் அளிக்க மொபைல் எண்கள் வெளியீடு

சுவாதி கொலை தொடர்பாக பொது மக்கள் ஏதேனும் தகவல் அறிந்தால் தெரிவிப்பதற்கு மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.


 

 
சுவாதி கொலை வழக்கில் காவல் துறையினர் குற்றவாளியை பிடிக்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சுவாதி கொலைக்கு சம்பதப்பட்ட தகவல்களை ஒருவர் பின் ஒருவராக தெரிவித்து வருகின்றனர்.
 
அதன்படி மேலும் குற்றவாளி பற்றி தகவல் அறிந்தால் விவரங்களை தெரிவிக்க மொபைல் எண் வெளியிடப்பட்டுள்ளது. 8939966985, 9840962359 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம். 
 
திருவல்லிக்கேணி துணை கமிஷனரை 9443481933 என்ற எண்ணிலும், நுங்கம்பாக்கம் கூடுதல் ஆணையரை 9840190505 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் 9751804830 மற்றும் 98840707878 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு குற்றவாளி குறித்த தகவல்களை தெரிவிக்கலாம் என்றும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்