Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

செந்தில் பாலாஜி திடீர் போர்க்கொடி: புதிய கட்சி தொடங்க வாய்ப்பு!

செந்தில் பாலாஜி திடீர் போர்க்கொடி: புதிய கட்சி தொடங்க வாய்ப்பு!


Caston| Last Modified வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (09:16 IST)
முன்னாள் அமைச்சரும் அரவக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி திடீரென போர்க்கொடி தூக்கியுள்ளார். அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் தம்பிதுரையே செந்தில் பாலாஜியின் இந்த அதிருப்திக்கு காரணம் என கூறப்படுகிறது.

 
 
கரூரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்க அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் தடையாக இருப்பதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார்.
 
இதனை கண்டித்தும், உடனடியாக கரூரில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கும் பணிகளை தொடங்க வலியுறுத்தியும் வரும் 24-ஆம் தேதி செந்தில் பாலாஜி உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ளார். இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி கேட்டு செந்தில் பாலாஜி கரூர் ஆய்வாளருக்கு கடிதம் ஒன்றும் எழுதியுள்ளார்.
 
மேலும் செந்தில் பாலாஜி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரில் புதிய கட்சி மற்றும் தொலைக்காட்சி சேனல் ஒன்றையும், டாக்டர் நமது புரட்சித்தலைவி என்ற பெயரில் நாளிதழ் ஒன்றையும் தொடங்க திட்டுமிட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.


இதில் மேலும் படிக்கவும் :