Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

யாரையும் அடைத்து வைக்கவில்லை; நல்லா பாருங்க: தலைக்காட்டிய சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்


Abimukatheesh| Last Updated: ஞாயிறு, 12 பிப்ரவரி 2017 (20:45 IST)
கூவத்தூர் நட்சத்திர விடுதியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் குடும்பமாய் ஒரே இடத்தில் உள்ளனர், யாரும் அடைத்து வைக்கப்படவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

 

 
கூவத்தூர் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக பொதுச் செயலாளர் கூறியதாவது:-
 
இங்கு அதிமுக கழகத்தினர் யாரும் அடைத்து வைக்கப்படவில்லை. அனைவரும் குடும்பமாய் ஒரே இடத்தில் உள்ளனர். ஆதரவு எம்.எல்.ஏ.க்களை வேண்டும் என்றால் எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள், என்றார்.
 
அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். ஏம்.எல்.ஏ.க்கள் கூவத்தூர் சென்ற நாளில் இருந்து எந்த செய்தியாளர்களும் அப்பகுதியில் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதையடுத்து செய்தியாளர்களுக்கு நட்சத்திர விடுத்திக்குள் அனுமதி வழங்கப்பட்டது.


இதில் மேலும் படிக்கவும் :