வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 14 மே 2019 (11:45 IST)

3வது அணி உருவாகுமா? ’புல் ஸ்டாப்’ வைக்காமல் ’கமா’ போட்ட ஸ்டாலின்!

திமுக தலைவர் ஸ்டாலின் 3வது அணி உருவாகுமா என்பது தேர்தல் முடிவுகளுக்கு பின்னரே தெரிய வரும் என தெரிவித்துள்ளார். 
 
நேற்று நடைபெற்ற சந்திரசேகரராவ், ஸ்டாலின் சந்திப்பு தமிழக அரசியலை மட்டுமின்றி தேசிய அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. மு.க.ஸ்டாலினுக்கு மூன்றாவது அணி அமைக்கும் சந்திரசேகராவுடன் பேச்சுவார்த்தையா? என காங்கிரஸ் கூட்டணி அதிர்ச்சி அடைந்தது.
 
ஆனால் ஸ்டாலின், சந்திரசேகரராவ் சந்திப்பில் உண்மையில் நடந்தோ வேறு. பாஜக, காங்கிரஸ் என இரண்டு தேசிய கட்சிகளும், ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டால், மூன்றாவது அணி ஆட்சி அமைப்பது குறித்து மு.க.ஸ்டாலினிடம் தனது விரிவான திட்டத்தை சந்திரசேகரராவ் விவரித்தாராம். 
இதை பொறுமையுடன் கேட்ட ஸ்டாலின், நான்தான் முதலில் ராகுல்காந்தியை பிரதமர் என அறிவித்தேன். அதனால் இப்போதைக்கு அதில் இருந்து பின்வாங்க முடியாது. முடிந்தால் நீங்களும் காங்கிரஸ் கூட்டணியை ஆதரியுங்கள் என்று கூறியதாக செய்தி வெளியானது. 
 
இந்நிலையில் இன்று சென்னை விமான நிலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ஸ்டாலின். அப்போது அவர் சந்திரசேகர ராவ் அணி அமைப்பதற்காக என்னை சந்திக்கவில்லை. தமிழகம் வந்திருந்த அவர் மரியாதை நிமித்தமாக என்னை சந்தித்தார். அதேபோல் 3வது அணி உருவாக வாய்ப்பு இருப்பதாக எனக்கு தெரியவில்லை, ஆனால், அணி அமையுமா என்பது மே 23 ஆம் தேதிக்கு பின்னரே முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.