வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 4 ஜனவரி 2017 (10:49 IST)

திமுக தலைமைப் பொறுப்பு இனி ஸ்டாலின் வசம்!- தொண்டர்கள் உற்சாகம்

திமுக செயல் தலைவராக திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படுவதாக திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


 

திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் இன்று (04.01.2017) காலை பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், இந்த கூட்டத்தில் திமுக செயல்தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும், செயல் தலைவருக்கு வழங்கப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை பொதுச்செயலாளர் அன்பழகன் முன்மொழிய, துரைமுருகன் வழிமொழிந்தார். திமுகவின் சட்டவிதி 18ல் திருத்தம் செய்யப்பட்டு, அவர் செயல் தலைவராக ஆக்கப்பட்டுள்ளார்.

இந்த அறிவிப்பை திமுக பொது செயலாளரான க.அன்பழகன் அறிவித்தார். அப்போது அறிவிப்பை வாசிக்கும்போதே கண் கலங்கினார் அன்பழகன்.

அதே சமயம் அன்பழகன் அறிவித்ததும் அண்ணா அறிவாலயமே அதிரும் அளவிற்கு திமுக நிர்வாகிகள் எழுந்துநின்று கைத்தட்டி வரவேற்றனர். இதனால், செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலினும் சிறுது கண் கலங்கினார்.