Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சசிகலா பற்றி பேசினால் என் தரம் குறைந்துவிடும்: மு.க.ஸ்டாலின்


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (20:03 IST)
சசிகலாவை பற்றி பேசி என் நேரத்தை விணாக்க விரும்பவில்லை, என் தரத்தை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை என்று ஆளுநரை சந்தித்த செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

 திமுக செயல் தலைவர் தற்போது ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-  

ஆளுநரிடம் தமிழக அரசின் செயல்பாடு குறித்து விவாதித்தேன். ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பின் அதிமுக கட்சியில் மல்லுக்கட்டு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக எந்த பணிகளும் நடைப்பெறவில்லை, அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கியுள்ளது.  

உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு கூட அரசு ஒத்துழைக்கவில்லை என்று நீதிமன்றத்தில் உள்ளாட்சி தொடர்பான வழக்கில் கூறப்பட்டுள்ளது.

பிணை கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஜனநாயகப்படி விடுவிக்கப்படும் என்று கோரியுள்ளேன். சசிகலாவை பற்றி பேசி என் நேரத்தை விணாக்க விரும்பவில்லை, என் தரத்தை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை, என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :