ஆங்கிலத்தில் கேள்வி: டிவி விவாதத்தில் பாதியிலேயே தொடர்பை துண்டித்த மு.க.ஸ்டாலின்!

ஆங்கிலத்தில் கேள்வி: டிவி விவாதத்தில் பாதியிலேயே தொடர்பை துண்டித்த மு.க.ஸ்டாலின்!


Caston| Last Modified செவ்வாய், 13 ஜூன் 2017 (12:39 IST)
அதிமுக எம்எல்ஏக்கள் சசிகலா அணியால் விலை பேசப்பட்டது குறித்து டைம்ஸ் நவ் தொலைக்காட்சி எம்எல்ஏ சரசவணன் பேசிய வீடியோவை வெளியிட்டு தமிழக அரசியலில் நேற்று பெரும் புயலை கிளப்பியது.

 
 
இதனை வைத்து டைம்ஸ் நவ் தோலைக்காட்சி விவாத நிகழ்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி, பாஜக மற்றும் அரசியல் விமர்சகர்கள் கலந்துகொண்டனர். மேலும் இதில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தொலைப்பேசி மூலம் கலந்துகொண்டார்.
 
இதில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலினிடம் முதலில் தமிழில் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அழகாக தமிழில் பதில் அளித்தார். ஆட்சியை கலைக்க வேண்டும் எனவும், பணத்தின் அதிகாரம் வெளிப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
 
பின்னர் டைம்ஸ் நவ் ஆங்கில ஊடகம் என்பதால் அனைத்து மக்களுக்கும் புரிய வேண்டும் என்பதால் அவரிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்க போவதாக தொகுப்பாளர் கூறினார். இதனையடுத்து மு.க.ஸ்டாலின் உடனடியாக தனது இணைப்பை துண்டித்து விட்டார். ஆங்கிலத்தில் கேள்வி கேட்க போவதாக கூறியதும் மு.க.ஸ்டாலின் தனது இணைப்பை துண்டித்தது பரபரப்பாக பேசப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :