எல்லோரும் உடனே சென்னைக்கு வாங்க! திமுக எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவு போட்ட தளபதி


sivalingam| Last Modified திங்கள், 15 மே 2017 (22:57 IST)
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாளை சென்னைக்கு வரவேண்டும் என்று தளபதி மு.க.ஸ்டாலின் திடீரென உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் காரணம் என்ன என்று விளங்காமல் திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களே குழப்பத்தில் உள்ளனர்.


 


தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் ஒருபுறம், இன்னொரு புறம் மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக அரசு இயங்கி வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டு ஒரு புறம், அதுமட்டுமின்றி மு.க.ஸ்டாலின் கவர்னருக்கு எழுதியுள்ள கடிதத்தில்  உடனடியாக சட்டமன்ற கூட்டத்தை கூட்ட முதல்வருக்கும், பேரவை தலைவருக்கும் ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றும், குழப்பமான அரசியல் சூழலை சரிசெய்ய ஆளுநர் சட்டசபை கூட்டத்தை கூட்ட உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் நாளை காலை சென்னை வரவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நாளை காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாகவும் இந்த கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகும் என்றும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :