Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

திராணி இருந்தால் ஓ.பி.எஸ் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லுங்கள் - சீறிய மு.க.ஸ்டாலின்

புதன், 8 பிப்ரவரி 2017 (11:41 IST)

Widgets Magazine

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஆளும், சசிகலா தரப்பு மீது பல பகீரங்க குற்றச்சாட்டுகளை வைத்தார். சசிகலா தரப்பு தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர் என கூறினார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 

 
இது குறித்து கருத்து தெரிவித்த செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்  “முதல்வரை சசிகலா செயல்படவிடவில்லை என்பதைதான் திமுக தொடர்ந்து சொல்லிக்கொண்டு வந்தது. அதையே ஓபிஎஸ் தன்னுடைய பேட்டியில் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்த முதலமைச்சரையே மிரட்டி ராஜினாமா கடிதம் வாங்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என தெரிவித்தார்.
 
அதிமுகவிற்குள் “சிரிப்பாய் சிரிக்கும் காட்சிகளுக்கு”என்னைப் பார்த்து ஓ.பி.எஸ் சிரித்ததுதான் காரணம் என்று சசிகலா கூறுவது வெட்கக்கேடானது என அவருடைய டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
 
அதற்கு சிலர், திமுகவை கிண்டலடித்து சில கருத்துகளை பதிவு செய்தனர். இதற்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின் “ ஓபிஎஸ் பட்ட அவமானங்களை அம்மையார் சமாதி முன்பு நின்று பட்டியலிட்டிருக்கிறார். திராணி இருந்தால் அதற்கு பதில் சொல்லுங்கள் திமுகவை சீண்டாதீர்கள்” என டிவிட்டரில் சீறியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஓபிஎஸ் வீடு வீடாக மக்களை சந்திக்க வருகிறார்: தொடங்கியது அதிரடி அரசியல்!

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தான் கட்டாயத்தின் அடிப்படையில் ராஜினாமா செய்ய ...

news

அரசை எதிர்த்த 13,000 பேருக்கு தூக்கு: சிரியாவில் கொடூர தண்டனை!!

சிரிய நாட்டு சிறை ஒன்றில் கடந்த ஐந்து வருடங்களில் 13,000 பேர் தூக்கிலிடப்பட்டிருப்பதாக ...

news

ஜெ.வின் மரணம் குறித்து நீதி விசாரணை - சசிகலாவிற்கு செக் வைத்த ஓ.பி.எஸ்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் ஓ. ...

news

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன்: ஓபிஎஸ் சூளுரை!

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவரது இல்லத்தில் தற்போது செய்தியாளர்களை சந்தித்து ...

Widgets Magazine Widgets Magazine