வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 28 நவம்பர் 2015 (16:37 IST)

அமைச்சர்கள் பிற மாநிலங்களில் சொத்துக்களை வாங்கி குவிக்கின்றனர் - ராமதாஸ்

தமிழக அமைச்சர்கள் அனைவரும் தமிழகம் கர்நாடகம் கேரளம் ஆகிய மாநிலங்களில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து அவர் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், ”தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவேன் என ஓயமாட்டேன் என ஜெயலலிதா சபதம் நிறைவேற்றியுள்ளார். சபதம் நிறைவேற்றும் வகையில் பல வகையில் முதலிடத்தை தமிழகத்தை கொண்டு வந்துள்ளார்.
 
இந்தியாவின் பெரிய மாநிலங்களில் கடன் சுமை குறித்து வெளியிட்டுள்ள ஒரு இதழ் 2014 - 15 வரையில் தனிநபர் கடன் சுமை தமிழகம் முதலிடம் இருப்பது தெரிவித்துள்ளது. 
 
முதல்வர் தோழி சசிகலா இளவரசி குடும்பத்தினர் சென்னையில் 11 தியேட்டர்களை விலைக்கு வாங்கி உள்ளார்கள். அதே போன்று தமிழகத்தில் பல திரையரங்குகளை வாங்குவதற்கு விலை பேசி உள்ளார். தமிழக அமைச்சர்கள் அனைவரும் தமிழகம் கர்நாடகம் கேரளம் ஆகிய மாநிலங்களில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர்.
 
தமிழகத்தில் ஊழல் நடக்காத துறையே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்திலும் நடந்துள்ளது.
 
இது இப்படியிருக்க, நகர செயலாளரே 100 கோடி சொத்து வைத்துள்ள நிலையில் முதல்வர் ஆயிரம் கோடி சொத்து குவித்திருப்பது பெரியவிஷயமாக என்று ஒரு அமைச்சர் பேசிகிறார். ஊழலுக்கு ஊடகங்கள் துணை போக கூடாது. ஆனால் துணை போகிறார்கள்.
 
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  இந்த பகுதியில் சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். கடந்த மாதம் கறம்பக்குடி ஒன்றியத்தலைவர் கங்கையம்மாள், சொக்கலிங்கம் ஆகியோர் தாங்கள் பகுதி பிரச்னைக்காக அமைச்சரை சந்தித்து உள்ளனர்.   
 
முத்தரையர் சேர்ந்தவர்களை அவர்களின் சமுதாயத்தை சேர்ந்தவர்களை பெண் பாராமல் தரக்குறைவாக திட்டியுள்ளார். இதனை கண்டித்து கடந்த 5ம் தேதி பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி முத்தரையர் சமுதாயத்தினர் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர்.
 
ஆனால் அந்த போராட்டத்திற்கான அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காமல் அவமரியாதைக்குள்ளான சொக்கலிங்கம் கங்கையம்மாள் கட்சியில் இருந்து நீக்கத்திற்குள்ளானார். இது சமூக அமைதிக்கு வழிசெய்யாது. அமைச்சர் விஜயபாஸ்கரை நீக்கம் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.